Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இடி தாக்கி பலியான 6 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்: முதல்வர் உத்தரவு

அக்டோபர் 16, 2019 08:10

சென்னை: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.

புதுக்கோட்டை மாவட்டம் செம்பாட்டூரில் நேற்று இடி தாக்கியதில், வைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி, விஜயா, கலைச்செல்வி மற்றும் லட்சுமியம்மாள் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் எறையசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த வேலு நேற்று மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார் .நசரத்பேட்டையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த களியனூரை சேர்ந்த கோபி மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த 6 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு கூறியுள்ளார்

தலைப்புச்செய்திகள்