Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயோத்தி வழக்கு: மாலை 5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய ரஞ்சன் கோகாய் உத்தரவு

அக்டோபர் 16, 2019 08:16

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டாத நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட்  6 ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது. 

இதுவரை 39 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்றுடன் வாதங்களை முடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்துக்கள் தரப்பிற்கு 45 நிமிடங்களும், முஸ்லீம் தரப்பிற்கு ஒரு மணி நேரமும் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். 

அயோத்தி வழக்கு நடைபெற்று வருவதால் அசாம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க அயோத்தியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. நவம்பர் 17க்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்