Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 102 வது இடம்

அக்டோபர் 16, 2019 11:52

புதுடில்லி: 2019 ம் ஆண்டில் 117 நாடுகளை கொண்ட பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாக்., நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றை விட இந்தியா பின்தங்கி உள்ளது.

2030 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 100 அம்சங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பட்டினி நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவுக்கு 30.3 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 2014 ல் 76 நாடுகளைக் கொண்ட பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 55 இடத்தில் இருந்தது. 2017 ல் 119 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் இருந்தது. 2018 ல் 119 நாடுகளின் பட்டியலில் 103 வது இடத்தில் இருந்து, 2019 ல் 102 வது இடத்திற்கு சரிந்துள்ளது.

பட்டினி நாடுகளின் பட்டியலில் பாக்., 94வது இடத்திலும், வங்கதேசம் 88 வது இடத்திலும், நேபாளம் 73வது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் குழந்தைகள் வீணடிக்கும் உணவின் அளவு மட்டும் 20.8 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. அதிகரிக்கும் மக்கள் தொகை, உணவு வீணடிப்பு, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா பின்தங்குவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்