Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவுதம் காம்பீரின் பரிந்துரையால் பாகிஸ்தான் சிறுமிக்கு இந்திய மருத்துவ விசா

அக்டோபர் 20, 2019 01:47

புதுடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் காம்பீரின் முயற்சியால் பாகிஸ்தானைச் சேர்ந்த சிறுமி ஒருவருக்கு  இந்தியாவிற்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான விசா கிடைத்துள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒமைமா அலி என்ற சிறுமி இந்தியாவில் வந்து இதய அறுவை சிகிச்சை பெற விசா வழங்கி உதவிடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது யூசுப், கவுதம் காம்பீரிடம் செல்போன் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை மத்திய வெளியுறவு துறை அமைச்சரான ஜெய் சங்கரின் கவனத்துக்கு காம்பீர் எடுத்துச்சென்றார். இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர், சிறுமிக்கும் சிறுமியின் பெற்றோருக்கும் மருத்துவ விசா வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்