Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஹரியாணா தேர்தல்: சைக்கிளில் கட்டார்; டிராக்டரில் துஷ்யந்த் சவுதாலா வந்து வாக்களிப்பு

அக்டோபர் 21, 2019 05:51

ரோதக்: ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9 மணிநேர நிலவரப்படி 8.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதல்வர் கட்டார் சைக்கிளிலும், ஜனநாயக ஜனதா கட்சித் தலைவர் துஷ்யத் சவுதாலா டிராக்டரிலும் வந்து வாக்களித்தனர்.

ஹரியாணாவில் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. ஹரியாணா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்தத் தொகுதிகளில் 1,169 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 105 பேர் பெண்கள். மாநிலத்தில் 1.83 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். அவர்களுக்காக 16,357 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

சுமார் 75,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.முதல்வர் மனோகர்லால் கட்டார் வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

அதுபோலவே ஜனநாயக ஜனதா கட்சித் தலைவரும், ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரனுமான துஷ்யந்த் சவுதாலா தனது குடும்பத்தினருடன் டிராக்டரில் வந்து வாக்களித்தார்.

மாநிலம் முழுவதும் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஓரிரு இடங்களில் மழை காரணமாக சற்று மந்தமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 8.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தலைப்புச்செய்திகள்