Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாங்குநேரி தொகுதியில் ஒரு சில இடங்களில் மந்தநிலையில் வாக்குப்பதிவு

அக்டோபர் 21, 2019 08:01

நெல்லை: நாங்குநேரி தொகுதியில் பட்டியல் இனத்தில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவித்து அரசாணை வெளியிட வலியுறுத்தி  தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட போவதாக அந்த சமுதாயத்தினர் அறிவித்து இருந்தனர்.

ஆனால் இதற்கு பெரும் பகுதி கிராமத்தில் வரவேற்பு இல்லை. களக்காடு, தருவை, நாங்குநேரி பகுதியில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் பெருமளவு ஓட்டு போட்டனர். கீழப்பாட்டம் பகுதியில் உள்ள தேவேந்திரகுல சமுதாய மக்கள் பெருமளவில் ஓட்டுப்போடவில்லை. மற்ற கட்சி நிர்வாகிகள் மட்டும் குறைந்த அளவில் ஓட்டுப்போட்டனர்.

இதனால் அந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் குறைந்த அளவு வாக்குப்பதிவாகி வருகிறது.இதுபோல மூலக்கரைப்பட்டி பகுதியில் உள்ள அரிய குளம், உன்னங்குளம், கல்லத்தி பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் ஓட்டுப்போடவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் மிக குறைந்த அளவே வாக்குப்பதிவாகி உள்ளது.

இதுபோல நாங்குநேரியில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் பெருமளவில் சேர்ந்து இருக்கும் பகுதிகளிலும் ஓட்டுப்பதிவு மிகவும் குறைவாக நடந்துள்ளது. அந்த பகுதியில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்