Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகா., அரியானாவில் மிக மந்தமான வாக்குப்பதிவு

அக்டோபர் 21, 2019 08:21

புதுடில்லி : தமிழகத்தில் 2 தொகுதிகளில் நடக்கும் இடைத்தேர்தலில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அதே சமயம் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்த போதிலும் மந்தமாக இருக்கிறது.

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் இன்று (அக்., 21) சட்டசபை தேர்தல் நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்களில் காலியாக உள்ள 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. 

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் காலை 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 54.17 சதவீதமும் , நாங்குநேரியில் 41.35 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன.மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மிக மந்தமாகவே ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை 1 மணி நிலவரப்படி ஹரியானாவில் 33.34 சதவீதமும், மகாராஷ்டிராவில் 21.02 சதவீதமுமே ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. 

இவ்விரு மாநிலங்களிலும் காங் - பா.ஜ., இடையே நேரடி போட்டி உள்ளதாலும், லோக்சபாவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும் முக்கியமானதாக இவ்விரு சட்டசபை தேர்தல்களும் பார்க்கப்படுகிறது. ஆனால் மோசமாக பதிவாகி வரும் ஓட்டுப்பதிவு அரசியல் கட்சிகளை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக காங்.,க்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

தலைப்புச்செய்திகள்