Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மொரீசியசில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்

அக்டோபர் 23, 2019 11:19

கோவை: கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சோனாலி பிரதீப் (வயது 38). இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

சோனாலி பிரதீப் கடந்த 2015,16-ம் ஆண்டுகளில் திருமதி கோவை பட்டத்தையும், 2017-ம் ஆண்டு பூனேயில் நடைபெற்ற திருமதி இந்தியா தமிழ்நாடு என்ற அழகி போட்டியில் பங்கேற்று டைட்டில் பட்டத்தையும் வென்றார்.

மேலும் இவர் திறன் வளர்ப்பு குறித்து கோவையின் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இலவச பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் மொரீசியஸ் நாட்டில் கடந்த 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடைபெற்ற திருமதி இந்தியா யுனிவர்ஸ் என்ற திருமணமான பெண்களுக்கான அழகி போட்டியில் பங்கேற்றார். இந்த அழகி போட்டியில் 41 அழகிகள் கலந்து கொண்டனர். இதில் சோனாலி பிரதீப் திருமதி இந்தியா யுனிவர்ஸ் அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

அழகி பட்டம் வென்று கோவை வந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தலைப்புச்செய்திகள்