Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி

அக்டோபர் 24, 2019 04:13

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு கடந்த 21ந்தேதி வாக்கு பதிவு நடந்தது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.  இதில், தொடக்க சுற்றில் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் முன்னிலை பெற்றார்.

பின்பு தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜான்குமார் 14,782 வாக்குகளும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரன் 7,611 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் 392 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் புவனேஸ்வரனை விட 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி  பெற்றுள்ளார்.

தலைப்புச்செய்திகள்