Wednesday, 26th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மழைகால நோய்த்தடுப்பு பணி மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்து தீடீர் ஆய்வு

அக்டோபர் 25, 2019 07:23

ஆவடி: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் IAS மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகள் உடன் ஆவடி அரசு மருத்துவ மனையை  ஆய்வு செய்தனர்.

தனியார் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட கொசு புகை போக்கி வாகனங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை கொடியசைத்து துவங்கி வைத்தார். பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெங்கு டெங்கு கொசு பற்றிய விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் டெங்கு நோய் அறிகுறிகளை கண்டறிந்து அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணம் அடங்கிய பைகளை வழங்கினார்.

ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள் நோயாளி பிரிவில் காய்ச்சல் சிகிச்சைக்கு பெற்று வரும் அனைவரையும் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். ஆவடியில் நோய் தடுப்பு மற்றும்  மழைக்கால முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னிலையில்  ஆவடி மாமன்ற கூட்ட அரங்கத்தில் சுமார் 2 மணி நேரம் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  பேசும்போது, டெங்கு நோயால் பதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு  அரசு அறிவுறுத்தியுள்ள சிகிச்சை முறைகளை மட்டுமே பின்பற்ற வேண்டும். அதை கடைபிடிக்காத மருத்துவர்கள் மீது தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மூலம் நடவடிக்க எடுக்கப்படும் எனவும் கூறினார். பின்னர் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் உடன் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

டெங்கு நோய் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  இந்த கூட்டத்தில் ஆவடி மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி ஆவடி வட்டாட்சியர் சரவணன் துணை வட்டாட்சியர் செந்தில் வருவாய்த்துறையினர் சோனியா திருநின்றவூர் சிறப்பு பேரூராட்சி செயல் அலுவலர் திரு விஜயா மற்றும்  மருத்துவர் பனிமலர் ஆவடி மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளர் மோகன் கலந்து கொண்டனர்.

மேலும் பொறியாளர்  வைத்தியலிங்கம் சுகாதாரத்துறை துணை ஆய்வாளர் ஜாபர் தண்டுரை பகுதி ஆய்வாளர் பிரகாஷ் திருமுல்லைவாயில் பகுதியில் ஆய்வாளர் பிரகாஷ் துணைப் பொறியாளர் சத்தியசீலன் சங்கர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்