Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி

அக்டோபர் 27, 2019 04:02

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். ஆழ்துளை கிணற்றில் நேற்று மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் 85 அடி ஆழத்துக்கு சென்றது.

குழந்தை ஆழ்துளை கிணற்றில் சிக்கி 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், தற்போது 85 அடி ஆழத்திற்கு குழந்தை சென்றுவிட்டது.  குழந்தையை மீட்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் தற்போது குழந்தையை மீட்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது

ஆழ்துறை கிணறு அருகே சுரங்கம்போல மற்றொரு குழி தோண்டி குழந்தையை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது, 85 அடிக்கு குழி தோண்டி, பக்கவாட்டில் சென்று குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது.  

அதனைத் தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழிதோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.   இதனடிப்படையில் சுஜித் வில்சன் என்ற 2 வயது குழந்தையை மீட்பதற்காக காரைக்கால் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து ராட்சத எந்திரம் ஒரு பெரிய லாரியில் ஏற்றி கொண்டு வரப்பட்டது. சுமார் 2 மணி அளவில் ரிக் இயந்திரம் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது.

அதனைத் தொடர்ந்து ராட்சத எந்திரமான 96 டன் எடையுள்ள ரிக் இயந்திரத்தை  நிறுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றது.  தற்போது அடுத்த கட்டமாக குழி தோண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.   ரிக் இயந்திரத்தின் மூலம் சுமார் ஒன்றரை மணி நேரத்தில் 100 அடி வரை தோண்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.   ஒரு ஆள் இறங்குமளவுக்கு 1 மீட்டர் அகலத்தில் குழி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

குழந்தையை மீட்கவுள்ள தீயணைப்பு வீரர்கள் 3 கண்ணதாசன், திலீப்குமார், மணிகண்டன் ஆகயி 3 பேரும் நேற்று மாலை முதல் தயார் நிலையில் உள்ளனர்.   மணி சரியாது என நிபுணர்கள் உறுதியளித்தால் 2 மீ தொலைவில் துளையிட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் சிறுவன் குழியில் விழுந்து 37 மணி நேரத்தை கடந்து விட்ட நிலையில் சிறுவன்  சுர்ஜித் பத்திரமாக மீட்க பட வேண்டும் என்பது மக்கள் அனைவரது வேண்டுதலாக உள்ளது

தலைப்புச்செய்திகள்