Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உயிருடன் சுர்ஜித் மீட்கப்பட்டு பெற்றொரிடம் சேர்க்கப்படுவான்: ராகுல் காந்தி

அக்டோபர் 27, 2019 01:24

டெல்லி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

அவனை மீட்கும் பணிகள் சுமார் 50 மணி நேரமாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து ரிக் இயந்திரத்தின் மூலம் பக்கவாட்டில் குழி தோண்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ரிக் இயந்திரத்தின் மூலம் 100 அடி வரை குழி தோண்டும் முயற்சிகள் தொடர்கின்றன.  ஒரு ஆள் இறங்குமளவுக்கு ஒரு மீட்டர் அகலத்தில் இந்த குழி தோண்டப்பட்டு வருகிறது. இன்று காலை 10 மணி நிலவரப்படி சுமார் 30 அடி வரை குழி தோண்டப்பட்டது. சுமார் 35 அடி தோண்டிய பின்னர் இடையில் பாறை குறுக்கீட்டதால் இந்த முயற்சியில் சற்று பின்னடைவு ஏற்பட்டது. 

பாறையை குடையும் சக்தி வாய்ந்த இயந்திரத்தின் மூலம் தோண்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கரூரில் இருந்து 98 அடி ஆழம் வரை துளையிடும் சக்தி வாய்ந்த வாகனம் 3 மணியளவில் வந்து சேர்ந்தது.

அந்த இடத்தின் மண்ணை பரிசோதித்தப்பின் இந்த இயந்திரம் தொடர்ந்து துளையிடும் பணியை மேற்கொள்ள உள்ள நிலையில் 3.30 மணியில் இருந்து இப்பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது. மீட்பு பணி தொடங்கி சுமார் 50 மணி நேரம் ஆகும் நிலையில் சுர்ஜித் விரைவாகவும், பாதுகாப்பாகவும் உயிருடன் மீட்கப்பட வேண்டுமென இறைவனை வேண்டிக்கொள்வதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்