Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி பகுதியில் 50 சதவீதம் மட்டுமே மழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 27, 2019 01:27

திருச்சி: மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி பகுதியில் வானிலை மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளை சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. சிறுவனை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அப்பகுதியில் கனமழை பொழிவு ஏற்பட்டால் மீட்பு பணியில் இடையூறு ஏற்படுத்தும் என்பதால் அப்பகுதியில் நிகழும் வானிலை மாற்றங்கள் தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 

திருச்சி மாநகர பகுதியில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் வெப்பச்சலனம் காரணமாகவும் மேக மூட்டங்கள் காணப்படுவதால் அப்பகுதியில் விட்டுவிட்டு மழையானது பெய்து வருகிறது. இலங்கை பகுதியில் தற்போது உருவாகி உள்ள மேகங்கள் நகர்ந்து வந்தாலும் இரவு நேரங்களில் திருச்சி பகுதியில் 50 சதவீதம் மட்டுமே மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடுகாட்டுப்பட்டி பகுதிகளில் நிகழும் வானிலை மாற்றங்களை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து அந்த தகவலை தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணனுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்ந்து தகவலை அளித்து வருகிறார்.

தலைப்புச்செய்திகள்