Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்

அக்டோபர் 30, 2019 03:47

சென்னை: பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் ஏ.பி.சாஹி, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.

இவரை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யலாம் என கொலிஜியம் சமீபத்தில் பரிந்துரை செய்தது. இவர் நவம்பர் 13-ம் தேதிக்குள் பதவி ஏற்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்