Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உதவி தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்கள் நியமனம்

நவம்பர் 02, 2019 12:08

சென்னை: உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது.

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்தப்படுவது வழக்கம். தேர்தலுக்காக பயிற்சி வகுப்புகள், செயல்முறை விளக்கம், ஓட்டுப்பதிவு, வாக்கு எண்ணிக்கையில் எவ்வாறு ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும். தற்போது உள்ளாட்சி தேர்தலில் உதவி தேர்தல் அதிகாரியாக ஆசிரியர்களை மாவட்ட கலெக்டர்கள் நியமித்து வருகிறார்கள். இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் உள்ளிட்ட வாக்குச்சாவடி அலுவலர்களாக ஆசிரியர்கள் கடந்த தேர்தல் வரை பணியாற்றி வந்தோம். அது கற்பித்தல் பணி பாதிக்காத அளவிற்கு நடந்தது. தற்போது விரைவில் அறிவிக்கப்பட உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்காக தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக பணியமர்த்தப்படுவதால் தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து குறிப்பாக வேட்புமனு பெறுவதிலிருந்து தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்படும் வரை குறைந்தபட்சம் 15 நாட்களிலிருந்து அதிகபட்சம் ஒரு மாதம் வரை நீடிக்கும். உதவி தேர்தல் அதிகாரி பணி அலுவலங்களில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்