Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்டட இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை

நவம்பர் 08, 2019 03:58

சென்னை: ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான  30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். ஜேப்பியார் கல்வி குழும அதிகாரிகள், உறவினர்களின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பல்வேறு இடங்களில் பாலிடெக்னிக், இன்ஜினியரிங் கல்லூரிகளை தொடங்கி நடத்தி வந்தார். 

ஜேப்பியார் மறைவுக்குப் பிறகு அவரது மகள் மற்றும் மருமகன்கள் கல்லூரிகளை கவனித்து வருகின்றனர். இந்தக் குழுமத்துக்கு சொந்தமாக, சூளைமேடு ரயில்வே காலனியில் உள்ள பனிமலர் பாலிடெக்னிக் கல்லூரி, செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் கல்லூரி, பூந்தமல்லியில் உள்ள பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். 

மேலும், கன்னியாகுமரி மாவட்டம் முட்டத்தில் உள்ள ஜேப்பியார் துறைமுக அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்த சோதனை 2-வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்த சோதனையில் கணக்கில் வராத பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. 

தலைப்புச்செய்திகள்