Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜார்கண்ட்: ஹேமந்த் சோரன் முதல்வராக காங்கிரஸ் ஆதரவு

நவம்பர் 09, 2019 05:48

ராஞ்சி: விரைவில் நடைபெற உள்ள ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தலில் ஜே.எம்.எம் காங்., கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன. ஜார்கண்ட் மாநில சட்டசபையின் ஆயுட்காலம் வரும் ஜனவரி மாதம் 3-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து சட்டசபைக்கான தேர்தல் ஐந்து கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

முதல்கட்டமாக நவ.,25, 2 ம் கட்டம் டிச.,2 , 3 ம் கட்டம் டிச.,9, 4 ம் கட்டம் டிச..,14, 5 ம் கட்டம் டிச.,20 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவு டிச., 23 ல் வெளியிடப்பட உள்ளது. கடந்த 29-ம் தேதி முதல்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் துவங்கி உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்காக ஜே.எம்.எம். கட்சியும், காங்., உட்பட சில கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. 

இது குறித்து காங்கிரஸின் மாநில பொறுப்பாளர் ஆர்.பி.என் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மொத்தம் உள்ள 81 இடங்களில் ஜே.எம்.எம்., கட்சி 43 இடங்களிலும் , ராஷ்டிரிய ஜனதா தளம் 7 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும் முதல்வர் பதவியை ஜே.எம்.எம். கட்சிக்கு அளிப்பது என கூட்டணியில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டணிக்கு ஹேமந்த் சோரன் தலைமை வகிப்பார். அவரே முதல்வர் வேட்பாளராக இருப்பார். என கூறினார். 

இவர்களின் கூட்டணியில் இடது சாரி கட்சிகளுக்கு இடம் ஒதுக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பாபுலால் மரான்டி தலைமையிலான ஜார்கண்ட் விகாஸ்கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. கடந்த தேர்தலின் போது பா.ஜ.,37 இடங்களிலும், ஜே.எம்.எம் 19 இடங்களிலும் , காங்கிரஸ் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தலைப்புச்செய்திகள்