Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ் கண்டிஷன்

நவம்பர் 10, 2019 03:41

மும்பை: சிவசேனா பாஜகவுடன் இருக்கும் தொடர்பை துண்டித்து, மத்தியில் கூட்டணியில் இருந்து விலகினால் கூட்டணி குறித்து யோசிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார். மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை ஆட்சி அமைக்க அம்மாநில ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். 

இரண்டாவது பெரிய கட்சி என்பதால் சிவசேனாவிற்கு ஆளுநர் பகத் சிங் அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவிற்கு விருப்பம் இருந்தால் நாளை மாலைக்குள் ஆட்சி அமைப்பது தொடர்பாக உரிமை கோரி கடிதம் அளிக்கலாம் என்று ஆளுநர் பகத் சிங் குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் சிவசேனாவிற்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு அளிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. சிவசேனாவுடன் ஏற்கனவே காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. தேசியவாத காங்கிரசும் சிவசேனா உடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார். அவர், சிவசேனாவிற்கு ஆதரவு அளிப்பது பற்றி யோசித்து முடிவு செய்வோம். ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதால், ஆதரவு தருவது குறித்து முடிவு செய்வோம். இதுவரை சிவசேனாவிடம் இருந்து எந்த அழைப்பும் எங்களுக்கு வரவில்லை.

சிவசேனா பாஜகவுடன் இருக்கும் தொடர்பை துண்டிக்க வேண்டும். பாஜகவுடன் எந்த உறவையும் சிவசேனா கொள்ள கூடாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினால் சிவசேனாவிற்கு ஆதரவு. மத்திய அமைச்சரவையில் இருக்கு சிவசேனா அமைச்சர்கள் எல்லோரும் பதவி விலக வேண்டும்.

நவம்பர் 12ம் தேதி நாங்கள் இது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளோம். இந்த முடிவை சிவசேனா எடுக்க வேண்டும். அப்படி செய்தால், சரத் பவார் சிவசேனா உடன் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்வார் என்று நவாப் மாலிக் பேட்டி அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்