Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு

நவம்பர் 11, 2019 01:11

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஏ.பி.சாஹி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்றார்.

அவருக்கு ஆளுநர் பன்வாரிலால்  புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள் பங்கேற்றனர்.

1985-ல் சட்டப் படிப்பை முடித்த ஏ.பி.சாஹி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 2006-ல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018-ல் பாட்னா உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்