Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தலில் காதுகேளாதோர் போட்டியிடலாம்: தமிழக அரசு

நவம்பர் 12, 2019 12:52

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் போட்டியிடலாம் என்று சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இதுவரை, தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக முடிவு செய்தது. 

அதன்படி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டது. இதற்கான சட்ட திருத்தம் கடந்த சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்