Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தான் ஏவுகணை பயன்படுத்தியது அம்பலம்

மார்ச் 01, 2019 12:30

புதுடில்லி: இந்திய எல்லைக்குள் புகுந்து பாக்., விமானம் தாக்குதல் நடத்தியது தொடர்பான ஆதாரங்களுடன் முப்படைகளின் தளபதிகள் நேற்று (பிப்.,28) கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, தாக்குதலுக்கு பாக்., பயன்படுத்திய எப் 16 விமானத்தின் உடைந்த பாகத்தை அவர்கள் காட்டினர். அது ஏவுகணையின் பாகம் என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். 

பாக்., விமானத்தின் மீது பதில் தாக்குதல் நடத்த இந்தியா பயன்படுத்தியது மிக் 21 ரக விமானம். ஆனால் பாக்., பயன்படுத்திய எப்-16 ரக விமானம். இது வான் வழியாக சென்று இலக்கை தாக்கக் கூடிய  ஏவுகணை ரகத்தை சேர்ந்தது.  
இந்த ஏவுகணையை பாக்., அமெரிக்காவிடம் இருந்து பெற்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே அமெரிக்கா இந்த ஏவுகணையை பாக்.,கிற்கு அளித்தது. இதனை மீறி, ரஜோரியில் உள்ள இந்திய விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்த பாக்., இதனை பயன்படுத்தி உள்ளது. 

ஆனால் எப் 16 ரக விமானத்தை தாங்கள் பயன்படுத்தவில்லை என பாக்., மறுத்துள்ளது. இது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில், இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்.,கின் எப் 16 ரக விமானத்தின் உடைந்த பாகம் இந்திய எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

இது குறித்து ஏர் வைஸ் மார்ஷெல் ஆர்.ஜி.கே.கபூர் கூறுகையில், பாக்., கிடம்  பொருத்தப்பட்ட வேறு எந்த விமானமும் இல்லை. பாக்., எப் 16 விமானத்தை பயன்படுத்திற்கு இதை விட ஆதாரம் தேவையில்லை. எப் 16 ன் எலக்ட்ரானிக் அடையாளம் இதில் உள்ளது. நமது விமானப்படை தளங்களை பாக்., குறிவைத்து தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும். எந்த விதமான தாக்குதலுக்கும் நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.

தலைப்புச்செய்திகள்