Friday, 5th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கழிப்பறையில் திருவள்ளுவர் படம் சர்ச்சை

நவம்பர் 13, 2019 05:04

குன்னுார் : குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கழிப்பறையில், திருவள்ளுவர் மற்றும் சுவாமி சிலை அடங்கிய ஓவியம் வரையப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில், பாரம்பரிய ரயில் இன்ஜின் காட்சிப்படுத்தி வைக்கப்பட்ட தடுப்புச் சுவரில், புலி, காட்டெருமை, யானை உள்ளிட்டவை, ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. 

இவை, சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையில், பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தமிழக பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக, ஜல்லிக்கட்டு, காளைகள், சேவல் சண்டை, தாரை தப்பட்டை, களரி, சிலம்பம் உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனுடன் சுவாமி சிலை, திருவள்ளுவர் ஓவியங்கள் வரைந்துள்ளது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக, ஹிந்து அமைப்பினர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். ஹிந்து முன்னணி மாவட்டச் செயலர் கார்த்திக் கூறுகையில், ''தமிழக கலாசாரத்தை கேவலப்படுத்தும் விதமாக, கழிப்பறை சுவரில், திருவள்ளுவர் படமும், சுவாமி சிலையும் ஓவியமாக வரைவது கண்டிக்கத்தக்கது.''நடவடிக்கை எடுக்கா விட்டால், மாவட்ட மற்றும் மாநில அளவில் போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

தலைப்புச்செய்திகள்