Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊடகங்களை விளாசும் வெங்கையா

நவம்பர் 16, 2019 08:18

புதுடில்லி : இன்று "சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளது என துணை ஜனாதிபதி வெங்ககைய நாயுடு, ஊடகங்ளை தாக்கி பேசி உள்ளார்.

இந்திய பத்திரிக்கை தினத்தை முன்னிட்டு டில்லியில் நடந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் செய்திகள் என்பது செய்திகளை சொல்வதற்காக பயன்படுத்தப்பட்டது. அது செய்திக்கு புதிய விளக்கத்தை சொல்வதாகவோ அல்லது தவறான ஒரு விளக்கத்தை சொல்வதாகவோ இருந்ததில்லை. ஆனால் தற்போது செய்திகள் மற்றும் கண்ணோட்டம் திணிக்கப்படுவதாக உள்ளது. அது தான் பிரச்னையே. பரபரப்புவாதம் என்பது தான் மரபாக இன்றைய நாளில் மாறி உள்ளது.

"சென்ஷேசனல் நியூஸ்" (sensational news) என்றாலே அது "சென்ஸ்லெஸ் நியூஸ்" ( senseless news) ஆக தான் உள்ளது. வணிக குழுக்கள், அரசியல் கட்சிகள், பிரபலங்கள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வதற்காக டிவி சேனல்கள் மற்றும் செய்திதாள்களை பயன்படுத்துகின்றனர்.அரசியல் கட்சிகள் பத்திரிகைகள் துவங்கலாமா என கேட்கிறீர்கள்? துவங்கலாம். ஆனால், எந்த கட்சியால் அந்த பத்திரிகை துவக்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

தலைப்புச்செய்திகள்