Saturday, 29th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிறமொழியில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழில் மாற்றம்: அமைச்சர் பாண்டியராஜன்

நவம்பர் 16, 2019 08:33

சென்னை: தமிழகத்தில் பிறமொழியில் இருக்கக்கூடிய ஊர்ப்பெயர்கள், தெருப் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முதற்கட்டமாக 1000 பெயர்கள் விரைவில் மாற்றப்படும் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் கனரா வங்கி  கருத்தரங்கில் அவர் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், ஐஐடி காவிமயம் ஆகிகொண்டு வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. எல்லாவற்றையும் காவிமயமாக பார்க்கக்கூடாது என்றும், தமிழக அரசை  பொறுத்தவரை வானவில்லின் நிறம் போல பாரதப் பண்பாட்டில் ஒன்றாக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

தலைப்புச்செய்திகள்