Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உள்ளாட்சி தேர்தல் மேயர் பதவி: 15 இடங்களிலும் அதிமுக போட்டி

நவம்பர் 17, 2019 04:16

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிகளை கூட்டணிக்கு ஒதுக்குவது இல்லை என்று அதிமுக முடிவு செய்துள்ளது. 15 மேயர் பதவிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளனர். இதனால் 4 மேயர் பதவி கேட்ட பா.ஜ,  3 கேட்ட பாமக, 2 கேட்ட தேமுதிக தலைவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய  கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. அதன்படி, பாமக, பாஜ, தேமுதிக, தமாகா உள்ளிட்ட சில கட்சிகளை மக்களவை தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இணைத்துக் கொண்டது.

கடந்த மாதம் தமிழகத்தில் காலியாக இருந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.இந்த இரண்டு தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது. இதனால் கட்சி தலைமை உற்சாகம் அடைந்துள்ளது. இதே வேகத்தில் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்  என்று அதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமைக்கு கோரிக்கை வைத்தனர்.

அதிமுக கூட்டணி கட்சிகள் கடந்த மக்களவை தேர்தல் போன்று உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவிடம் இருந்து அதிக சீட்டுகளை பெற்றுவிட வேண்டும் என்று இப்போதே காய் நகர்த்தி  வருகிறது. குறிப்பாக, பாமக, பாஜ, தேமுதிக கட்சிகள் தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் அதிக அளவு மேயர் வேட்பாளர் சீட்டுகளை அதிமுகவிடம் இருந்து பெற முயற்சி செய்து வருகிறார்கள்.

அதன்படி, பாமக சார்பில் சென்னை, வேலூர், சேலம் உள்பட 3 மேயர் பதவிகளிலும், பாஜ சார்பில் சென்னை, கோவை, நாகர்கோவில், வேலூர் ஆகிய மேயர் தொகுதிகளையும், தேமுதிக சார்பில் திருச்சி உள்பட 2 மேயர் சீட்டுகள் வேண்டும்  என்று அதிமுகவுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது தவிர்த்து அதிகளவில் நகராட்சி தலைவர் பதவிக்கான சீட்டுகளையும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கூட்டணி கட்சிகளின் இதுபோன்ற கோரிக்கைகளால் அதிமுக கட்சி தலைமைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளிலும் அதிமுக வேட்பாளர்களே போட்டியிடுவார்கள். இதே கருத்தைத்தான் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் கூறியுள்ளார். அமைச்சர் கூறிய கருத்தைதான், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும்  வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு மேயர் தொகுதியில் போட்டியிட சீட் கிடையாது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் கூட்டணி கட்சி தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்