Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

36 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம்

நவம்பர் 17, 2019 05:55

சென்னை: 'சந்தையில் விற்பனையில் உள்ள, 36 மருந்துகள் தரமற்றவை' என, மத்திய மருந்து தர கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. நாட்டில் விற்பனை செய்யப்படும், அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை, மத்திய - மாநில மருந்து தர கட்டுப்பாடு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. அதில், போலி மருந்துகள் கண்டறியப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர்மாதத்தில், 1,163 மருந்துகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், 1,127 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், காய்ச்சல், குடற்புழு நீக்கம், கிருமித் தொற்று, தொண்டை புண் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படும், 36 மருந்துகள் போலியாகவும், தரமற்றவையாகவும் இருந்தன. இது குறித்த அறிவிப்பு, cdsco.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மருந்துகள், தமிழகத்தில் திருப்போரூரிலும், ஆந்திரா, ஹிமாச்சலபிரதேசம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிர மாநிலங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.

தலைப்புச்செய்திகள்