Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு

நவம்பர் 17, 2019 11:14

லக்னோ: அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் பிரச்சினைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம், அதற்கான அறக்கட்டளை 3 மாதங்களுக்குள் உருவாக்கப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. மேலும், அங்கிருந்த மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது, மசூதி கட்ட வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்படவேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்பாகவும் அரசிடம் இருந்து 5 ஏக்கர் நிலத்தை அயோத்திக்குட்பட்ட பகுதியில் பெறுவது தொடர்பாகவும் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சட்ட நிபுணர்களின் உயர்மட்ட ஆலோசனை கூட்டத்துக்கு இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் இன்று ஏற்பாடு செய்திருந்தது. சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  சையத் காசிம் ரசூல் இல்யாஸ்

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் மத்திய ஆலோசனை குழு உறுப்பினர் சையத் காசிம் ரசூல் இல்யாஸ் ‘சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்ய  இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் தீர்மானித்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்