Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி லட்டு விலை உயர்த்த மாட்டோம்: தேவஸ்தானம்

நவம்பர் 17, 2019 12:05

திருப்பதி: திருப்பதியில் சலுகை விலை மற்றும் இலவச லட்டு நடைமுறை ரத்து செய்யப்பட்டு, தரிசனம் முடித்து வருபவர்களுக்கு ஒரு லட்டு மட்டும் இலவசமாகவும், கூடுதலாக வாங்கும் ஒரு லட்டுக்கு ரூ.50க்கும் விற்கப்பட இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதற்கு தேவஸ்தான குழு தலைவர் சுப்பா ரெட்டி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்; லட்டு விலை உயர்வது குறித்து வெளியான தகவல்கள் வதந்தியே. விலை உயர்த்த கருத்துகள் பெறப்பட்டது, ஆனால் தேவஸ்தான நிர்வாகம் அதை பரிசீலிக்கவில்லை, என தெரிவித்தார். இலவசமாக ஒரு லட்டும்.4 லட்டு ரூ70க்கும் கிடைக்கும் என லட்டு விநியோகத்தில் முந்தைய நடைமுறையே தொடரும் எனவும் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்