Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்பு

நவம்பர் 17, 2019 12:50

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்வுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் 46ஆவது தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் தேதி பதவியேற்ற ரஞ்சன் கோகாய், பதவிக்காலம் நவம்பர்17ஆம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவி பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக, அடுத்த நீதிபதி யார் என பரிந்துரைத்து அறிவிப்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை பரிந்துரை செய்து தலைமை நீதிபதி ரஞன் கோகாய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதன்படி, ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் 47ஆவது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே நாளை பதவியேற்வுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். அவரது பதவிக்காலம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை நீடிக்கும்.

தலைப்புச்செய்திகள்