Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பதி: தமிழக அரசின் இலவச சேலைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன

நவம்பர் 18, 2019 07:35

திருப்பதி: தமிழக அரசின் இலவச சேலைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள பல்வேறு நகரங்களில், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த, சி.எம்.ஆர்., என்ற நிறுவனத்திற்கு சொந்தமாக, மால்கள் எனப்படும், வணிக வளாகங்கள் உள்ளன. இந்த வணிக வளாகங்களில், ஜவுளி, தங்கம், வெள்ளி ஆபரணங்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்திற்கு சொந்தமான துணிக்கடைகளில், தமிழக அரசு சார்பில், ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் சேலைகள், தள்ளுபடி விலை என்ற அறிவிப்புடன், விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில், ரேஷன் அட்டை பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த இலவச சேலைகளில், அதிகபட்ச சில்லரை விலையாக, 196 ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சேலைகள், தள்ளுபடி போக, 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல, 146 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்ட, இன்னொரு ரகத்தைச் சேர்ந்த சேலைகள், 38 ரூபாய் தள்ளுபடி போக, 108 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல் தமிழகத்தில், மக்களுக்கு வழங்கபட்ட இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி உள்ளிட்டவை, சில ஆண்டுகளுக்கு முன், ஆந்திர மாநிலத்தின் சாலை ஓரங்களில், கூவி கூவி விற்கப்பட்டன. அந்த வரிசையில், தற்போது சேலைகளும் இணைந்து உள்ளன.

தலைப்புச்செய்திகள்