Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஐஐடி மாணவி தற்கொலை விவகாரம்: 3 பேராசிரியர்களுக்கு சம்மன்

நவம்பர் 18, 2019 08:03

சென்னை: கேரள மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூடுதல் கமி‌ஷனர் ஈஸ்வர மூர்த்தி மேற்பார்வையில் கூடுதல் துணை கமினர் மேக்லினா தலைமையிலான அதிகாரிகள் ஐ.ஐ.டி.க்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

மாணவியின் தந்தை அப்துல்லா சென்னை வந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். இதையடுத்து சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் தங்கி இருந்த அப்துல்லாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின்போது தன்னிடம் இருந்த சில ஆதாரங்களை மாணவியின் தந்தை போலீசாரிடம் ஒப்படைத்தார். இந்த நிலையில் மாணவி பாத்திமாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை ஏற்று 3 பேரும் இன்று அல்லது நாளை நேரில் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்