Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சேனல்களுக்கு ஷாக்: யூடியூப்

நவம்பர் 18, 2019 12:59

புதுடில்லி : வருமானம் ஈட்டாத சேனல்களை யூடியூட் தளத்தில் இருந்து நீக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வணிக ரீதியாக வெற்றி பெறாத யூடியூப் சேனல்களை மட்டுமல்லாது அவை பதிவிட்ட அத்தனை வீடியோக்களும் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது உலக அளவில் பல 'யூடியூபர்களை' பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த ஆண்டுக்குள்ளாகவே இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என யூடியூப் சேனல்களுக்கு மெயில் மூலமாகத் தகவல் தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது.வளர்ந்து வரும் யூடியூப்பர்களைப் பலியாக்கி பெரிய சேனல்களை மட்டும் வளர்க்க யூடியூப் உதவுகிறது என சர்வதேச அளவில் பலரும் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்து வருகின்றனர். இப்புதிய விதியை வருகிற டிச.10-ம் தேதி முதலே யூடியூப் செயல்படுத்தத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

தலைப்புச்செய்திகள்