Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

நவம்பர் 19, 2019 11:27

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட துறை சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றனர்.  

இந்த அமைச்சரவை கூட்டத்தில், சர்க்கரைக்கான ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், அரிசி வாங்கும் கார்டு ஆக அதனை மாற்றிக் கொள்ளலாம். இந்த பயனாளர்கள் அரிசி கார்டுக்கு உரிய அனைத்தையும் பெற்றுக் கொள்ளலாம் என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. ஆன்-லைன் வாயிலாக இன்று முதல் வரும் 26-ம் தேதி வரை http://www.tnpds.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். மேலும் வட்டவழங்கல் அதிகாரியிடம் விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களுடன் ரேஷன் கார்டு நகலை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்