Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திராகாந்தி பிறந்த வீட்டிற்கு ரூ.4.35 கோடி செலுத்த நோட்டீஸ்

நவம்பர் 20, 2019 11:06

உத்திரபிரதேசம்: உ.பி.,யில் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி பிறந்த வீட்டிற்கு ரூ.4.35 கோடி  வீட்டு வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த வீட்டிற்கு குடியிருப்பு அல்லாத பிரிவின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. ஆனந்த் பவன் என்று அழைக்கப்படும் இந்த வீட்டினை காங்., இடைக்கால தலைவர் சோனியா தலைமையிலான ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளை பராமரித்து வருகிறது.

ஆனால், 2013 முதல் வரி செலுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி வரி மதிப்பீட்டு அதிகாரி மிஸ்ரா கூறுகையில், வரி அளவை தீர்மானிக்க கணக்கெடுப்பு நடத்தினோம். அதன்படி, வரி மதிப்பீடு செய்து நோட்டீஸ் அனுப்பினோம், என்றார்.

இதற்கு பிரயாக்ராஜ் முனிசிபல் கார்பரேஷன் முன்னாள் மேயர், சவுத்ரி ஜிகேந்திரநாத் சிங் மறுத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஜவஹர்லால் நேரு நினைவு அறக்கட்டளைக்கு அனைத்து வகையான வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆனந்த் பவனுக்கு வரி விதிக்க முடியாது, அது தவறு. இது சுதந்திரப் போராட்டத்தின் கோவில் மற்றும் நினைவுச் சின்னங்களின் அருங்காட்சியகம். மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு சவுத்ரி ஜிகேந்திரநாத் கூறினார்

தலைப்புச்செய்திகள்