Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கமலிடம் நலம் விசாரித்தார் ஸ்டாலின்

நவம்பர் 22, 2019 01:15

சென்னை:  சென்னை அப்போலோவில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட கமல்ஹாசனை நேரில் சந்தித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். திமுக பொருளாளர் துரைமுருகன், சுப.வீரபாண்டியன் ஆகியோரும் கமலை சந்தித்து நலம் விசாரித்தனர்.

காலில் பொருத்தப்பட்ட டைட்டானியம் கம்பியை அகற்றுவதற்காக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2016ஆம் ஆண்டில் ஏற்பட்ட விபத்தில் கமலுக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் டைட்டானியம் கம்பி பொருத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்