Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பாராட்டு: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை

நவம்பர் 22, 2019 01:46

புதுடெல்லி: சரபினா நான்ஸ் உலகின் உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வானியற்பியலில் பி.எச்.டி செய்கிறார். 26 வயதான நான்ஸ்  வானியற்பியல் சூப்பர்நோவாக்களை ஆராய்ச்சி செய்து வருகிறார்.

சரபினா நான்ஸ் என்ற பெண் அவரது இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதாகவும் அதற்குப் பின்னர் தனது துறையை மாற்றி ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். “தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.

மாணவியின் இந்த ட்விட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, சிறப்பாகச் சொன்னீர்கள் மிகவும் ஊக்கமளிக்கிறது எனப் பாராட்டியுள்ளார். இந்த மாணவியின் பதிவுக்கு 57 ஆயிரம் லைக்குகள், 10 ஆயிரம் ரீட்வீட்கள் என சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்புச்செய்திகள்