Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்

நவம்பர் 22, 2019 01:52

புதுடெல்லி: குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் நாள்தோறும் சராசரியாக 15 இந்தியர்கள் உயிரிழப்பதாகவும் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளீதரன் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர், வளைகுடா நாடுகளில் 2014ஆம் ஆண்டு முதல் 33,988 இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாகவும், இந்த ஆண்டில் மட்டும் 4 ஆயிரத்து 823 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2014-ஆம் ஆண்டு முதல் முறையே 5388, 5786, 6013, 5604, 6014 பேரும் 2018 வரை உயிரிழந்து உள்ளனர்.

சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய இருநாடுகளில்தான் அதிக அளவில் உயிரிழப்புகள் நேரிட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் உயிரிழக்கும் இந்தியர்களில் அதிகபட்சமாக கடந்த ஐந்து ஆண்டுகளில் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைப்புச்செய்திகள்