Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் பாலில் நச்சுத்தன்மை

நவம்பர் 22, 2019 02:00

புதுடெல்லி: தமிழகத்தில் வினியோகிக்கப்படும் பாலின் நச்சுதன்மை அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.மக்களவையில் இதுகுறித்து திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, தமிழகத்தில் வினியோகப்படும் பாலில் அனுமதிக்கப்பட்ட அளவை விட நச்சுதன்மை அதிகமாக உள்ளது என்றார்.

தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பாலில் அப்ளாடாக்சின் எம்.1 (aflatoxin m 1) என்ற நச்சுதன்மை உள்ளதாக கூறினார். அந்த வகையில் பாலில் நச்சுத்தன்மை அதிகமாக உள்ள மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்.

தலைப்புச்செய்திகள்