Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாராளுமன்ற தேர்தலில் ச.ம.க. நிலை குறித்து 5ந்தேதி முடிவு: சரத்குமார்

மார்ச் 02, 2019 06:30

தூத்துக்குடி: சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து வருகிற 5-ந்தேதி தெரிவிக்கப்படும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். சமத்துவ மக்கள் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் நிலைபாடு குறித்து வருகிற 5-ந்தேதி தெரிவிக்கப்படும். 

தே.மு.தி.க. இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பதில் தெரிவிக்க நான் விரும்பவில்லை. பா.ஜனதாவை பொருத்த வரையில் தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தெரிகிறது. 

அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியை பொருத்த வரையில் நிலைப்பாடு எடுத்தால் தெளிவாக எடுக்க வேண்டும். அரசியலில் விமர்சிக்கலாம். ஆனால் கீழ்த்தரமாக திட்டிவிட்டு எப்படி அருகில் உட்காருகிறார்கள் என்று தெரியவில்லை. நான் அப்படி இருக்கமாட்டேன். 

தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் ரூ.30 கோடி, ரூ.40 கோடி தேவை என்கிற என்ற அச்சம் உள்ளது. மக்களுக்கு சேவை செய்யும் நபர்களை சுதந்திரமாக தேர்ந்தெடுப்போம் என்ற நிலை எப்போது வருகிறதோ அன்றுதான் உண்மையான ஜனநாயகம். பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்