Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மதுரை - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை 2022ல் முடிவடையும்

நவம்பர் 23, 2019 06:31

நாகர்கோவில்: ''மதுரை - -கன்னியாகுமரி - -திருவனந்தபுரம் இரட்டை ரயில்பாதை திட்டம் 2022ல் நிறைவு பெறும்,'' என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான்தாமஸ் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கும் ரயில்வே பணிகளை ஆய்வு செய்த அவர் கூறியதாவது: மதுரை - மணியாச்சி -- கன்னியாகுமரி, கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் வரை உள்ள இரட்டை ரயில் பாதை பணிகள் 2022 மார்ச்சில் முடிவடையும். நிலம் கையகப்படுத்துவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உள்ளது.

தமிழக அரசு ரயில்வேக்கு சாதகமாக மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கு முடிந்ததும் இரட்டை ரயில் பாதை பணிகள் முடிவடையும்.கிழக்குக் கடற்கரை ரயில் பாதைக்கான ஆய்வுப்பணிகள் நடந்து வருகின்றன. ரயில்களில் திருட்டு மற்றும் சுகாதார வசதிகள் குறித்து புகார் இல்லை. கூடுதல் பாதுகாப்பு வழங்க பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. ரயில்கள் இயக்குவதால் உள்ள லாபம் அதிகரித்துள்ளது. தமிழக அரசை பொறுத்த வரை நல்ல ஒத்துழைப்பு தருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்