Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

துப்பாக்கி வெடித்ததில் வீடியோகிராபர் உயிரிழப்பு

நவம்பர் 24, 2019 04:53

பீகார்: பீகார் மாநிலம் ஹாஜிப்பூரில் திருமண வீட்டில் நடந்த கொண்டாட்டத்தின் போது வீடியோகிராபர் ஒருவர் உயிரிழந்தார்.  அப்பகுதியில் திருமண நிகழ்வின் போது வானை நோக்கி துப்பாக்கியால் சுடுவது வழக்கம்.

இதேபோல் திருமண நிகழ்வின் ஒருவர் தனது துப்பாக்கியில் தோட்டாவை நுழைத்துக் கொண்டிருக்கும்போது கைதவறி, விசையில் விரல்பட்டதால் துப்பாக்கி வெடித்தது.

அப்போது திருமண நிகழ்வுகளை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவரை நெஞ்சில் தோட்டா துளைத்தது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பே உயிரிழந்தார். இதுகுறித்து ஹாஜிபூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்