Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னையில் மீண்டும் பைக் ரேஸ்: இருவர் கவலைக்கிடம்

நவம்பர் 24, 2019 05:00

சென்னை: சென்னை மெரீனா சாலையில், போலீசாரின் தடை மற்றும் கட்டுப்பாட்டினை மீறி, பைக் ரேஸ் நடத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மெரீனா, அடையாறு பாலம், ஆர்.கே. சாலை போன்ற இடங்களில் பைக் ரேஸ் என்ற பெயரில் சில இளைஞர்கள் கண்மூடித்தனமான வேகத்தில் இருசக்கர வாகனங்களை இயக்கி வருகின்றனர். 

இதனால் உயிர்ச்சேதமும், படுகாயங்களும் அதிகரித்து வந்ததால், பைக் ரேஸ் நடத்த தடை விதித்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். பைக்ரேஸ் நடைபெறுவது ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், இன்று அதிகாலை மெரினா சாலையில் பைக் ரேஸ் நடத்தியுள்ளனர் இளைஞர்கள்..

காதைக் கிழிக்கும் சப்தத்துடன், சைலன்ஸரின் புகையுடன் நெருப்புப் பொறிகளும் பறக்க... ஜெமினி பாலம் முதல் ஆர்.கே சாலை வழியாக அசுர வேகத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் பைக் ரேஸின் போது, ஆர்.கே.சாலையைக் கடக்க முயன்ற இருவர் மீது இருசக்கர வாகனம் ஒன்று மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ரஹ்மான் மற்றும் அவரது நண்பர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள்மீது மோதிய இருசக்கர வாகனமோ இரு துண்டுகளாக உடைந்து போனது. விபத்தை ஏற்படுத்திய இளைஞரிடம் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்