Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனை அடுத்த மாதம் இயங்கும்

நவம்பர் 24, 2019 05:35

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது. பின்னர் புதிய தலைமை செயலக கட்டிடம் அரசின் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

இதையடுத்து மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்காக புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வந்தன. அந்த பணிகள் நிறைவு பெறாத நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் அங்கு மருத்துவ கல்லூரி மட்டும் செயல்பட்டு வந்தது.

மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக அந்த பகுதியில் உள்ள அரசு கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி வளாகத்துக்குள் நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் நிறைவடைந்தன.

இதையடுத்து முதல் கட்டமாக மருத்துவமனையின் கதிரியக்கவியல் துறையில் ரூ.2.70 கோடி மதிப்பில் நிறுவப்பட்ட 16 சிடி ஸ்கேன் கருவிகள், எக்ஸ்ரே உபகரணங்கள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கடந்த ஜூன் மாதம் தொடங்கப்பட்டது.

இதையடுத்து அடுத்த மாதம் முதல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முழுமையாக செயல்பட தொடங்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் மொத்தம் 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. மேலும் மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்புகளும், சான்றிதழ் படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

கல்லூரி வளாகத்தில் ரூ.345 கோடி செலவில் 7 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் தலா 2 கட்டிடங்கள் மருத்துவ கல்லூரி மற்றும் மாணவர் விடுதியாகவும், 3 கட்டிடங்கள் மருத்துவமனையாகவும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை அடுத்த மாதம் முதல் செயல்பட தொடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தலைப்புச்செய்திகள்