Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் பதவிக்கு போட்டியா: அகிலேஷ் யாதவ் பதில்

மார்ச் 03, 2019 05:26

புதுடெல்லி: பிரதமர் பதவிக்கு போட்டியா? - அகிலேஷ் யாதவ் பதில் 
பாராளுமன்ற தேர்தல் மூலம் பிரதமர் ஆக விரும்பவில்லை எனவும் பிரதமரை உருவாக்கத்தான் விரும்புகிறேன் என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையிலேயே தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டு பேசினார். 

அப்போது அவர், “பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படும். அது மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு புதிய பிரதமர் பதவி ஏற்பார்” என கூறினார். 

அப்போது அவரிடம், “அப்படியென்றால் நீங்கள் பிரதமர் ஆகலாம் என நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு அவர், “நான் பிரதமர் ஆக விரும்பவில்லை. பிரதமரை உருவாக்கத்தான் விரும்புகிறேன்” என பதில் அளித்தார். 

எதிர்துருவத்தில் இருந்த பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது பற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், “ அந்தக் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டி போடுவது அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கத்தான்” என குறிப்பிட்டார்.

தலைப்புச்செய்திகள்