Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி, இரண்டு துணை முதல்-மந்திரிகள் பதவி ஏற்பார்கள் என தகவல்

நவம்பர் 26, 2019 04:17

மும்பை: நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார். இந்நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாகவும், பாலா சாகிப் தோரட் (காங்) மற்றும் ஜெயந்த் பட்டீல் ஆகியோர் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா ஆட்சி அமைப்பது தொடர்பாக இன்று மாலை 7 மணிக்கு கவர்னரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமாவை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையில் சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. 

மராட்டிய முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற 4 நாட்களில் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சிவசேனா கூட்டணியை ஆட்சியமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்வி ராஜ் சவான் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் மராட்டிய மக்களிடம் பட்னாவிஸ், அஜித் பவார் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்