Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நித்தியானந்தாவின் உருவபடங்கள் எரிப்பு

நவம்பர் 26, 2019 04:37

பெங்களூரு: கிராபிக்ஸ் சாமியார் நித்திக்கு எதிராக மோசடி, ஆள்கடத்தல், பாலியல் குற்றச்சாட்டுக்கள் என தினமும் பல்வேறு புகார்கள் குவிந்து வரும் நிலையில் நித்தியானந்தாவின் உருவப்படத்தை தீவைத்து கொழுத்தி இறுதி சடங்குகள் செய்து கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

கிராபிக்ஸ் சாமியார் நித்தியானந்தாவிற்கு எதிராக அவரிடம் சீடராக இருந்து ஏமாற்றப்பட்ட ஜனார்தன சர்மா என்பவர் அளித்த புகாரின் பேரில் நித்தியின் அகமதாபாத் அலுவலக பெண் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஒரு சிறுவன் ,ஒரு சிறுமி மீட்கப்பட்ட நிலையில் ஜனார்த்தனசர்மாவின் இரு மகள்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிகளை அடைத்து வைத்தல், கடத்தல், துன்புறுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நித்தி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

நித்தியின் உருவப்படத்தை சடலம் போல வைத்து பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்த போராட்டக்காரர்கள் நித்திக்கு எதிராக கோஷம் எழுப்பினர். நித்தியை கைது செய்யக்கோரி கோசமிட்டப்படி முச்சந்தியில் வைத்து அவரது உருவப்படத்தை நித்தியின் உடலாக கருத்தி ஈமச்சடங்குகள் செய்தனர். சிலர் நித்தி படத்தின் முன்பு அமர்ந்து வாயில் ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்க அவரது படங்கள் தீவைத்து எரிக்கப்பட்டது

ஒருபுறம் நித்திக்கு எதிராக கன்னட அமைப்புகள் வைத்த தீ பற்றி எரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் கிரீன் மேட் உபயத்தில் யூடியூப்பில் கிராபிக்ஸ் சாமியார் நித்தி புதிய வீடியோ ஒன்றை நேரலை என்று வெளியிட்டார். எந்த பதற்றமும் இல்லாமல் முழு அமைதியாக ஆன்மீக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதாகவும், தனக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை என்றெல்லாம் ஆங்கிலத்தில் கதை அளந்த நித்தி தனக்கு தேசத்தை பற்றிய அக்கறை இல்லை என்பதை வாய்தவறி ஒப்புக்கொண்டார். பின்னர் சட்டென்று அதனை வாபஸ் பெற்றுக்கொண்டு தான் ஆண்டி இந்தியன் இல்லை என்றார். யூடியூப்பில் தொடந்து வீடியோ வெளியிட்டு வருவதால் நித்தியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். 

தலைப்புச்செய்திகள்