Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஜேஎன்யு.,வை மூடவேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி

நவம்பர் 27, 2019 07:10

புதுடில்லி: ஜவஹர்லால் நேரு பல்கலை.,யை 2 ஆண்டுகள் மூட வேண்டும் எனவும் பல்கலைகழகத்திற்கு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பெயரை வைக்க வேண்டும் எனவும் பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு பாராளுமன்ற தாக்குதலில் தொடர்புடைய அஃப்சல் குருவுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக ஜவஹர்லால் நேரு பல்கலை., (ஜே.என்.யு.,) மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், சில நாட்களாக விடுதி மற்றும் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அப்போது சில மாணவர்கள் தேச விரோத கோஷங்களை எழுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜ., மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: ஜவஹர்லால் நேரு பேரில் நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. எனவே பல்கலை.,யின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைகழகம் என மாற்ற வேண்டும். அதேபோல் அங்குள்ள சமூக விரோதிகளை அகற்ற பல்கலை.,யை 2 ஆண்டுகள் மூட வேண்டும். இவ்வாறு சுப்பிரமணிய சுவாமி பேசினார்.

தலைப்புச்செய்திகள்