Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரெயில்

நவம்பர் 27, 2019 08:00

சென்னை: சென்ட்ரல்- பரங்கிமலை, வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் வழித்தடத்தில் முதற்கட்டமாக மெட்ரோ ரெயில் பயணிகள் சேவை நடந்து வருகிறது.

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் விம்கோ நகர் வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் விரிவாக்கம் பணிகள் நடந்து வருகிறது. 2-வது கட்டமாக மாதவரம்-சிறுசேரிக்கு ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வழித்தட பாதை அமைக்க ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் புறநகர் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க விமான நிலையத்தில் இருந்து வண்டலூர், கிளாம்பாக்கத்துக்கு 15.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் வழித்தட பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் ஜி.எஸ்.டி. சாலையில் 15 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்படுகிறது.

புறநகர் மின்சார ரெயில் நிலையத்துக்கு மிக அருகில் இந்த வழித்தட பாதை உருவாக்கப்படுகிறது. 2021-ல் மெட்ரோ ரெயில் பணி தொடங்கப்பட உள்ளது.

விமான நிலையம்- கிளாம்பாக்கம் மெட்ரோ ரெயில் சேவை ஜி.எஸ்.டி. சாலையில் உயர்மட்ட பாதையில் செல்லும். இந்த புதிய வழித்தட மெட்ரோ வசதியால் ஐ.டி. ஊழியர்கள், வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பயன் பெறுவார்கள்.

தலைப்புச்செய்திகள்