Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரூ.1000 பொங்கல் தொகுப்பு திட்டத்தை நவ.29-ம் தேதி தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்

நவம்பர் 27, 2019 12:55

சென்னை: குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு திட்டத்தை வருகின்ற 29-ம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். பொங்கல் தொகுப்பு திட்டத்துடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இந்த திட்டத்தை தொடங்க உள்ளதாக தகவல் தெரிவித்தனர். 

பொங்கல் தொகுப்பாக அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்களுடன் ரூ.1000 வழங்க கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி கொண்டு வருகிறது. இந்த ஆண்டு பரிசுத்தொகை வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட தொடங்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் தொகுப்பாக ரூ.1000 பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தகவல் தெரிவித்தார். 

இந்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எப்போது திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் வருகின்ற 29-ம் தேதி முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்