Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

500-க்கும் மேற்பட்ட இந்திய கூகுள் பயனாளர்களை அரசு ஆதரவுடன் வேவு?

நவம்பர் 28, 2019 07:07

டெல்லி: கூகுளின் ‘அச்சுறுத்தல் பகுப்பாய்வு குழு’ தனது ஆய்வறிக்கையில் கூறும்போது சுமார் 149 நாடுகளின் 12,000த்திற்கும் மேற்பட்ட கூகுள் பயனாளர்களுக்கு கூகுள் எச்சரிக்கை அனுப்பியுள்ளது. அதாவது அரசு ஆதரவுடன் ஹேக் செய்பவர்களின் வேவு வலையில் சிக்குகிறார்கள் என்று கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் 500க்கும் மேற்பட்ட குறிப்பிட்ட பயனாளர்களின் கூகுள் நடவடிக்கைகளை அரசு ஆதரவு ஹேக்கர்கள் வேவு பார்க்கின்றனர் என்று இந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எதர்ச்சியாக நிலவும் சீனாவைக் காட்டிலும் இந்த எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. ஆனாலும் கூகுள் பயனாளர்களை வேவு பார்ப்பதில் இந்திய அரசு ஆதரவு ஹேக்கர்கள் அவ்வளவு மோசமில்லை என்று கூறும் இந்த அறிக்கை அமெரிக்காவில் சுமார் 1000த்திற்கும் அதிகமாக அரசு ஆதரவுடன் கூகுள் பயனாளர்கள் கணக்குகள் வேவு பார்க்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.குறிப்பாக அரசு வேவு பார்ப்பவர்களில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் பிரச்சாரகாரர்கள் போன்றவர்கள் அதிகமாக அரசினால் வேவுக்காக குறிவைக்கப்படுகின்றனர் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கூகுள் ஆய்வு பிரிவைச் சேர்ந்த ஷேன் ஹன்ட்லி என்பவர் சமீபத்தில் தனது வலைப்பதிவில் கூறுகையில், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரகாரர்கள் ஆகியோர் எங்களது ‘அட்வான்ஸ்டு புரடெக்சன் புரோகிராம்’ என்பதில் இணயுமாறு ஊக்குவித்து வருகிறோம். இது எந்த ஒரு ஹேக்கர்களிடமிருந்து பயனாளர்களை பாதுகாக்கும் என கூறினார். இந்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றும் புதிதல்ல பேஸ்புக்கின் மற்றொரு நிறுவனமான வாட்ஸ்-அப் சமீபத்தில் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தது. 

குறிப்பாக பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் அடங்கிய சுமார் 1,400 போன் கருவிகள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. இதில் பெரும்பாலும் இந்தியாவின் பயனாளர்கள் அடங்குவர் என்று கூறியிருந்தது. யார் யாரெல்லாம் இப்படி அரசின் கண்காணிப்பு வலையில் சிக்குகிறார்களோ அவர்களின் பாஸ்வேர்டுகளை முதலில் எப்படியாவது பெற்று அவர்களின் முழு நடவடிக்கைகளையும் அரசு கண்காணித்து விடும் என்று கூகுள் அறிக்கை தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்